Thursday 17 November 2011

120 கோடி - கோவிந்தா...! கோஓஓஓ...விந்தா...!!



அண்மையில் உலக மக்கள் தொகை 700 கோடியை எட்டியது. அந்த 700வது கோடி குழந்தை நமது நாட்டில் உத்திரப்பிரதேசத்தில் பிறந்ததாகக் கொண்டாடப்பட்டது. இது ஏதோ பெருமைக்குரிய நிகழ்வு எனப் பலர் நினைக்கின்றனர். ஆனால் எதிர்காலத்தில் உலகத்தை அழிக்கப்போவதில் பெரும்பங்கு நம் இந்தியாவிற்க்குதான் என்பதில் எந்த ஐயமுமில்லை. ஏனெனில் சீனா வெளியிட்டிருக்கும் ஒரு செய்தி, '700வது கோடி குழந்தை எங்கள் நாட்டில்தான் பிறந்திருக்கும்... ஆனால் நாங்கள் 5 ஆண்டுகளுக்கு முன்னரே கடைபிடித்து வரும் கடுமையான மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுக் கொள்கையினால் அது நிகழவில்லை' என கூறியுள்ளது கவனிக்கத்தக்கது. உண்மையில்... இந்திய நிலப்பரப்பிற்க்கும் இங்குள்ள இயற்கை வளத்திற்க்கும் உகந்த மக்கள் தொகை வெறும் 20 கோடி மட்டுமே என்று ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது.  ஆனால் இருப்பதோ 120 கோடி.

நமது தலைவர்களில் சிலருக்கு இந்த உண்மைகள் தெரிந்திருந்தும் ஓட்டுக்காக, 'நாம் மனித வளத்தில் முன்னணியில் உள்ள நாடு எனவும் இந்திய மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் இளைஞர்கள் எனவும்' பெருமையாகக் கூறி வருகின்றனர். அவர்கள் வாரிசுகளை மட்டும் விவரமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி விட்டனர். மக்கள் தொகை 20 கோடி மட்டுமிருந்தால் ஐரோப்பிய நாடுகளைப் போல் நம்மில் பெரும்பாலோர் சொந்த வீடு, கார் மற்றும் நிம்மதியான வேலை என மகிழ்ச்சியாக வாழலாம். தற்போதைய நிலைமையில் இந்திய மக்க்ள் தொகையில் 40 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்க்குக் கீழ் உள்ளனர். இது போக 120 கோடிப் பேர் வெளியிடும் கழிவுகள் (அதுவும் நம் நாட்டில் இன்றும் கூட 99 சதவீத கிராமங்களில் ஓப்பன் டாய்லெட் தான்), அதனால் பரவும் நோய்கள்... இது ஒருபக்கம். இதுபோக அத்தனை பேருக்கும் தேவையான தண்ணீர், உணவு, சொந்த வீடு மற்றும் வேலை வாய்ப்புக்கெல்லாம் எங்கே போவது ?. இரயில் நிலையம், பேருந்து நிலையம், ரேசன் கடை, திரையரங்கு,  டாஸ்மாக் (நிம்மதியா ஒரு கட்டிங் அடிக்க முடியல) என எங்கே பார்த்தாலும் கூட்ட நெரிசல், தள்ளுமுள்ளு. இதனால் உண்டாகும் நேர விரயம். பிறகு எப்படி நாம் வல்லரசாவது? வாய்ப்பே இல்லை!. யாரவது 2020 என்று சொன்னால் நம்பாதீர்கள்!. ஏனெனில் 2021ல் அதாவது அடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 160 கோடிப் பேர் நமது நாட்டில் இருப்பார்கள் எனப் புள்ளிவிவரங்கள் பயமுறுத்துகின்றன. அதற்க்குள் இந்த நாட்டைவிட்டுத் தப்பித்து ஓட என்னைப் போன்ற உஷார் பேர்வழிகள் சிலர் முடிவெடுத்திருக்கிறோம். நம்மால வரிசையில் மணிக்கணக்காக நிற்க முடியாதுப்பா!

பெரும் மக்கள் வளம் நம்மிடம் உள்ளது என பெருமையடித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் சிறு மக்கள் தொகை கொண்ட நாடுகளிலுள்ள உலக வங்கி, ஐ.ம்.எஃப் போன்றவற்றில் கடன் வாங்குகிறோம். என்னவொரு முரண்பாடு?. மக்கள் தொகை அதிகமாக ஆக குற்றங்களும் அதிகரிக்கின்றன. இது வருடா வருடம் போலிஸ் வேலைக்கு ஆளெடுக்கும் எண்ணிக்கை அதிகரிப்பதை வைத்தே தெரிந்து கொள்ளலாம். உலகின் முன்னணி நாடுகளுக்கு இந்த உண்மைகள் தெரிந்திருந்தும் அவர்கள் சொல்லமலிருக்கக் காரணம் அவர்களின் பொருட்களை விற்க்கும் சந்தையாக மட்டும் நம்மைப் பார்ப்பதுதான்.  ஆகவே நன்றாக சிந்திப்பீர்! இரவு நேரங்களில் பாதுகாப்பாக செயல்படுவீர்!! ஒரு குழந்தையே போதுமப்பா!!!

No comments:

Post a Comment