Sunday, 12 February 2012

திருப்பூர் புத்தகக் கண்காட்சி - சில அனுபவங்கள்


தொடர் வேலைப் பளு காரணமாக பதிவு போட முடியவில்லை என்று வருத்தமாக இருக்கிறது. எனினும் தொடர்ந்து பதிவு போட முயற்சி செய்கிறேன்.

சென்ற ஜனவரி 25 முதல் பிப்ரவரி 5 வரை நடைபெற்ற 9வது திருப்பூர் கண்காட்சிக்கு மூன்று முறை சென்றேன். இயற்கை வரலாறு அறக்கட்டளையின் கானுயிர் புகைப்படக் கண்காட்சி அரங்கும் இடம் பெற்றிருந்தது. புகைப்படங்களும் மிகச் சிறப்பாக இருந்தன. பள்ளி மாணவர்கள் பலர் வியப்புடன் புகைப்படங்களைப் பார்த்து ரசித்தனர்.

எப்பொழுதும் புத்தகக் கண்காட்சியில் இரண்டாயிரம் ரூபாய்க்காவது புத்தகங்கள் வாங்குவேன். ஆனால் இந்த முறை மிகக் குறைவாகவே வாங்கினேன். காரணம் ஏற்கனவே வாங்கிய புத்தகங்களில் பெரும்பாலானவற்றை இன்னமும் திறந்து கூடப் பார்க்கவில்லை. அவைகளை சும்மாவேனும் அடுக்கி வைத்து என்ன பயன்?. மேலும் புத்தகக் கண்காட்சி முழுவதும் சுற்றி வந்து பார்த்தால் தொண்ணூற்றியைந்து விழுக்காடு புத்தகங்களால் ஒரு பயனும் இல்லை என்பது தெளிவாகப் புலப்படுகிறது. காகிதத்திற்குப் பிடித்த கேடு எனத் தோன்றுகிறது.

புத்தகங்களில் பெரும்பாலானவை வெளிநாட்டுத் தன்னம்பிக்கைப் புத்தகங்கள், ஜோதிடம், சமையல் குறிப்புகள், ஆன்மிகம், பணம் சம்பாதிப்பது எப்படி? போன்ற வகையறக்களாகவே உள்ளன. இருந்தாலும் கீழ்க்கண்ட சில புத்தகங்களை வாங்கினேன். ஏதாவது தேறுமா என்று பாருங்களேன்.

1) கனவுகளின் விளக்கம் - சிக்மண்ட் ஃபிராய்ட் - தமிழில் : நாகூர் ரூமி
2) காசு ஒரு பிசாசு - கலையரசன்.
3) வாழ்விழந்து வரும் கிராமிய இசைக்கருவிகள் - வெ. நீலகண்டன்
4) ஊர்சுற்றிப் புராணம் - ராகுல் சாங்கிருத்யாயன்
5) ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம் - மால்கம் க்ளேட்வெல் - தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்
6) சினிமா வியாபாரம் - சங்கர் நாராயணன்
7) கொத்து பரோட்டா - சங்கர் நாராயணன்
8) அழிக்கப் பிறந்தவன் - யுவ கிருஷ்ணா
9) ஆமென் - சிஸ்டர் ஜெஸ்மி

3 comments:

Kumaran said...

சிறப்பான பகிர்வு..தொடர்ந்து எழுதுங்கள்..என் நன்றிகள்.
சைக்கோ திரை விமர்சனம்

சாவி said...

நாகூர் ரூமியின் புத்தகம் ரசிக்கத்தக்க ஒன்று. உங்களுக்கும் பிடிக்கும். படித்து விட்டு ஒரு விமர்சனம் எழுதுங்களேன்?

சாவியின் தமிழ் சினிமா உலகம்

ருத்ரபூமி 10-02-2012 Journey 2: The Mysterious Island திரை விமர்சனம்

மதுரை அழகு said...

//நாகூர் ரூமியின் புத்தகம் ரசிக்கத்தக்க ஒன்று. உங்களுக்கும் பிடிக்கும். படித்து விட்டு ஒரு விமர்சனம் எழுதுங்களேன்?// சாவி said...

கண்டிப்பாக எழுதுகிறேன்.

Post a Comment