Monday 12 September 2011

அன்னா ஹசாரேவும் மெழுகுவர்த்தி விற்பனையும்

அண்மையில் நாடு முழுவதும் எழுச்சியை ஏற்படுத்திய என்று ஊடகங்களால் ஊதிப்பெரிதாக்கப்பட்ட அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதம் சில கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுப்பதாகக் கூறியதால் கைவிடப்பட்டது. ஊழல் ஒழிய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது. இதுமாதிரியான போரட்டங்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற உண்மையான ஜனநாயகம் இருக்கும் நாடுகளில் வேண்டுமானால் எடுபடும். உதாரணத்திற்க்கு மோனிகா லெவின்ஸ்கி என்ற சப்பை மேட்டருக்காக உலகின் பெரும்பாலான நாடுகளின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பவர்ஃபுல்லான அமெரிக்க ஜனாதிபதி கிளின்டனை கூண்டில் ஏற்றினார்கள். ஆனால் இந்தியா போன்ற போலி ஜனநாயகம் உள்ள நாட்டில் இதெல்லாம் வெறும் உணர்ச்சியைத்தூண்டும் வேலையன்றி வேறொன்றுமில்லை.

மேலும் பல்வேறு மொழிகள், மதங்கள் மற்றும் எண்ணிலடங்கா ஜாதிகள் உள்ள நாட்டில் மக்களை எவ்வாறு ஒருங்கிணைக்க முடியும் ? வாய்ப்பே இல்லை...! அப்படி ஒருங்கிணைக்க முடிந்திருந்தால் இலங்கையில் வழிந்தோடிய குருதியை தடுத்து நிறுத்தி இருக்கலாமே...! நமது நாட்டைப்பொறுத்தவரை அரசியல்வாதிகள் எப்பொழுதுமே ஒரு பாதுகப்பான வளையத்தில் இருப்பர்கள். அந்த வளையத்திற்குள் யாராவது நுழைய முற்பட்டால் பாபா ராம்தேவுக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும். அந்தக்கால போஃபர்ஸ் முதல் இந்தக்கால் காமன்வெல்த் வரை இதுதான் நிதர்சனம். சரி ! ஊழலை ஒழிக்க வேறு என்னதான் வழி ? திருடனாய்ப்பாத்து திருந்தாவிட்டல் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகள்தான் எனக்குத்தெரிந்த ஒரே வழி !

அன்னாவின் போராட்டத்தால் மெழுகுவர்த்தி விற்பனை வேண்டுமானால் அதிகரிக்கலாம். மற்றபடி வடிவேலு பாணியில் போய் பிள்ளைகளைப் படிக்க வைங்கைய்யா... சும்மா கப்பித்தனமாப் பேசிக்கிட்டு...

2 comments:

K said...

வணக்கம் மதுரை அழகு சார்! கும்புடுறேனுங்க! உங்க நியாயமான ஆதங்கம் புரிகிறது! வாழ்த்துக்கள்!

K said...

சார், பதிவுலகின் புதியவரான உங்களை வருக வருக என்று அன்புடன் வரவேற்கிறேன்! இந்த வேர்ட் வெரிஃபிகேஷனை எடுத்துடுங்க சார்!

நீங்க பதிவுலகில் மேலும் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்!

Post a Comment