நேற்று திருப்பூர் இரயில் நிலையத்தின் முகப்பில் மேற்கண்ட விளம்பரப் பலகை வைக்கப்பட்டிருந்தது. அது ஒரு நோட்டு, புத்தகங்கள் விற்கும் கடையின் பென்சில் ஆஃபர் விளம்பரம். எத்தனையோ நடிகர்கள் இருக்க, தற்காலிகமாக தமிழ்த் திரையுலகம் மறந்து போன வடிவேலுவின் முகம் தான் அந்தப் பலகை வைத்தவருக்கு ஞாபகத்தில் உள்ளது. இதுதான் வடிவேலுவின் பலம்.
அரசியலையும் சினிமாவையும் சேர்த்துப் பார்த்தே பழக்கப்பட்ட நாம் வடிவேலுவையும் அதே கோணத்தில் பார்த்து தற்காலிகமாக ஓய்வு கொடுத்திருக்கிறோம். இருந்தாலும் அவரே 'விகடன் மேடையில்' சொன்னது போல் நகைச்சுவை சானல்கள் அனைத்திலும் அவரின் காமெடி காட்சிகள் வராத சேனல்களே இல்லை எனலாம். இன்னும் ஒரு படி மேலே ஷங்கரின் 'சிவாஜி' படத்தில் நகைச்சுவைப் பாத்திரத்தில் விவேக் நடித்திருப்பார். இருந்தாலும் ஒரு காட்சியில் ரஜினி தன் குடும்பத்தினருடன் ஸ்ரேயா வீட்டுக்குள் நுழையும் போது, ஸ்ரேயா உடனே வடிவேலுவின் பிரபல வசனங்களில் ஒன்றான 'வந்துட்டாங்கையா! வந்துட்டாங்க...!' என்பார். மற்றொரு காட்சியில் ரஜினி தன்னை சீக்கிரமே சிவப்பாக்கிக் கொள்வதற்காக குங்குமப்பூவை அதிகமாகக் குடிப்பார். வயிறு கலக்கி பாத்ரூமிற்குள் அடிக்கடி போய் வந்து இறுதியில் வடிவேலு பாணியில் 'முடியல...!' என்பார். தன் ஒவ்வொரு ஃப்ரேமையும் புதுமையாக உருவாக்க வேண்டும் என நினைக்கும் ஷங்கரே வடிவேலுவின் வசனத்தைத் தன் படத்தில் வைக்கும் போது மற்ற இயக்குனர்கள் தன்னிகரில்லா காமெடிக் கலைஞனான வடிவேலுவை ஓரம் கட்டுவது ஏன்? புரியவில்லை!
அண்மையில் ஒரு பேட்டியில் கவியரசு வைரமுத்து, 'வடிவேலுக்கு வாய்ப்பு தராததால் இழப்பு அவருக்கில்லை! நமக்குதான்...!' என்றார். அதுதான் உண்மை!
நான் அடிக்கடி பார்த்து ரசிக்கும் வடிவேலுவின் 'முருகா' படத்தின் புகழ் பெற்ற பின்லேடன் காமெடி கீழே...
5 comments:
நான் வடிவேலு சாரின் பெரிய ரசிகன்..சமீப காலமாக அவர் சரியாக நடிக்காதது வருத்தம்..தாத்தா உட்பட குடும்பத்தில் அனைவரையும் வெகுவாக கவர்ந்த ஒரு நல்ல நடிகர்.சீக்கிரம் அவர் வர வேண்டும்.பகிர்வுக்கு நன்றி.
Falling Down (1993) - ஹாலிவுட் "இந்தியன்" தாத்தா (திரைப்பார்வை)
திறமையான நகைசுவை நடிகர்
வைரமுத்து சொன்னது போல இழப்பு நமக்கு தான்..
அவருடைய வசனங்கள் இன்றைய அன்றாட வாழ்வில் ஒவ்வொரு நிகழ்விலும் நாம் சொல்லும் படி உள்ளன என்பதே அவருடைய வெற்றி...
//அவருடைய வசனங்கள் இன்றைய அன்றாட வாழ்வில் ஒவ்வொரு நிகழ்விலும் நாம் சொல்லும் படி உள்ளன என்பதே அவருடைய வெற்றி...// mum said...
மிகச் சரி!
உண்மைதான். நாகேஷ் கவுண்டமணி செந்திலுக்கு பிறகு அனைத்து வயதினரும் பார்க்கக்கூடிய புரிந்துகொள்ளக்கூடிய நகைச்சுவை என்றால் அதற்கு வடிவேலுதான் சொந்தக்காரர்.
Post a Comment