கோடையில் ஏதாவது காடு சார்ந்த சுற்றுலா செல்ல முடிவெடுத்து அதுவும் ஒரு நாள்
சுற்றுலாவிற்குச் சிறந்த இடமாக பல மாதங்களாகச் செல்லத் திட்டமிட்ட
பரளிக்காட்டிற்குச் சென்றோம். கோவை வனத்துறை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு எங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொண்டோம். பரளிக்காடு சுற்றுலா சனி, ஞாயிறு மட்டுமே. நான்கைந்து நாட்களுக்கு முன்பே முன்பதிவு அவசியம்.