Friday 24 February 2012

வடநாட்டுக் களவாணிகள்


நேற்று தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்ட செய்தி... வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட ஐந்து பேரை போலிஸ் சுட்டுக் கொன்றது தான். கொள்ளையர்கள் அனைவரும் வட நாட்டைச் சேர்ந்தவர்கள். ஒரு காலத்தில் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து எழுச்சிமிகு போராட்டங்களை நடத்திய ஒரே மாநிலம் இந்தியாவிலேயே நமது தமிழ்நாடுதான் (வாழ்க! திராவிட இயக்கம்). அதை இன்றும் சிலர் வேண்டாத வேலை என்பார்கள். இந்தி தெரியாததால் நாம் தொழில்களில் அபிவிருத்தியாக முடியவில்லை! வட மாநிலங்களுக்குப் போய்
வேலைகளில் சேர முடியவில்லை என்பது போன்ற சப்பைக் காரணங்களைக் கூறுவார்கள். மேற்சொன்ன வங்கிக் கொள்ளையர்களுக்கு இந்தி நன்றாகத் தெரியும். அவர்கள் மாநிலத்திலேயே இருந்து களவுத் தொழில் செய்திருக்கலாமே! பிறகு இங்கென்ன வேலை? திராவிட இயக்கங்கள் நம்மை இந்தி படிக்க விடாமல் நம் வளர்ச்சியைத் தடுத்து விட்டனர் எனக் கூசாமல் கப்சா விடுபவர்களே! உங்களுக்குத் தெரியுமா? தொழில்துறை வளர்ச்சியில் இந்தியாவிலேயே மூன்று முன்னணி மாநிலங்களில் நமது தமிழ்நாடும் ஒன்று. பீகாரெல்லாம் எந்த மூலையில் இருக்கிறதென்றே தெரியவில்லை. பணப்புழக்கம் எங்கு அதிகமாக இருக்கிறதோ அங்கு கொள்ளையர்கள் வருவது இயல்பு. ஏன் மற்ற இரு மாநிலங்களுக்கு செல்வதில்லை என நீங்கள் கேட்கலாம்? சென்ற வருடம் மும்பைக்கு அரசுப் பணிக்கான தேர்வெழுதச் சென்ற பீகார் மற்றும் உ.பியைச் சேர்ந்த மாணவர்கள் ராஜ் தாக்கரே ஆட்களால் உதை வாங்கி ஓடிய செய்தி உங்களில் பலருக்குத் தெரியும். அம்மாநிலங்களில் பீகார் மற்றும் உ.பி காரர்களை வேலைக்குச் சேர்த்துக் கொள்வதில்லை. ஆனால் நாம் குறைந்த கூலியைக் கொடுத்து அவர்களை வரவழைக்கிறோம். பிறகு அதற்கான பலனை அனுபவிக்கிறோம்.

மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பு கோவைப்பதிப்பின் அனைத்து செய்தித்தாள்களிலும் வந்த ஒரு அருவருப்பான செய்தியை உங்களில் பலர் படித்திருக்கலாம். கோவையருகே உள்ள ஒரு தோட்டத்தில்... பிறந்து இரண்டு மாதங்களே ஆன கன்றுக்குட்டியின் வாயைக் கட்டிப்போட்டுவிட்டு அதனோடு நான்கு கபோதிகள் உறவு கொண்டு பொதுமக்களிடம் பிடிபட்டனர் என்பதுதான் அந்தச் செய்தி. அவர்கள் வேரு யாருமல்ல...! சாட்சாத் பீகார்க்காரர்கள்! எனவே எந்த வேலை வாய்ப்பானாலும் நம்மவர்களையே அதில் சேருங்கள்! வடநாட்டுப் பரதேசிகளை இறக்குமதி செய்து நமது புறநானூற்றுப் பண்பாட்டை இழக்காதீர்கள்!

Saturday 18 February 2012

கூடங்குளம் - காலத்தின் கட்டாயம்



கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் இப்போதைக்கு முடிவதாக இல்லை. அணு உலைக் கழிவால் தற்போது இருக்கும் மக்கள் மட்டுமல்ல... வருங்கால சந்ததியினரும் சேர்த்துதான் பாதிப்புகுள்ளாவர்கள் என்பது தான் போராட்டக்குழு முன்வைக்கும் முக்கியக் குற்றச்சாட்டு. இதற்கு அவர்கள் காட்டும் உதாரணம் ரஷ்யாவில் நடந்த செர்னோபில் அணு உலை விபத்து. இது நடந்தது 1986ல். ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன்பு. 25 ஆண்டுகளாக எந்தவித அப்டேட்டும் இல்லாமல் பழைய தொழில்நுட்பத்தையே பயன்படுத்த ரஷ்யர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. அவர்கள் நாட்டில் திறந்த வெளியில் யாரும் மல ஜலம் கழிப்பதில்லை. ஆனால் நம் நாட்டில்...?. இந்த சிறிய பொது சுகாதாரத்தில் கூட தரமில்லாத நாம் அணு உலைப் பாதுகாப்பைப் பற்றிப் பேசுவது வேடிக்கையானது!

நமது வரிப்பணம் சுமார் 14000 கோடியைக் கொட்டி இறைத்திருக்கும் அணு உலையைச் சப்பைக் காரணங்களைச் சொல்லி மூடச் செய்வதில் எந்த நியாயமுமில்லை. முதலில் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் என ஆரம்பமான மின் வெட்டு தற்பொழுது பத்து மணி நேரமாக மாறியுள்ளது. சில இடங்களில் பதிமூன்று மணி நேரம். இதனால் சிறு தொழில்கள் முடங்கி... அதை நம்பியுள்ள லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் தொடர் மின் வெட்டைக் கண்டித்துக் கோவையில் திரண்ட கூட்டமே இதற்கு சாட்சி.

நமது மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்து கூடங்குளம் அணு உலை செயல்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்கத் தொடங்கிவிட்டன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டக் குழுவினர் ... 'உங்கள் பகுதியில் அணு உலை வந்தால்தான் தெரியும் அதன் பாதிப்பு என்னவென்று...' என்கிறார்கள். அணு உலை ஒன்றும் பெட்டிக்கடையல்ல... முச்சந்திக்கு முச்சந்தி வைப்பதற்கு. அதற்கென்று பிரத்யேகமான புவியியல் அமைப்பு வேண்டும். அது கூடங்குளத்தில் பொருந்தி வருகிறது.

தேநீரில் ஆரம்பித்து உயர்தர அறுசுவை உணவு விடுதி வரை நாம் கூறுகட்டி அடிக்கும் உணவுகளில் கலப்படமில்லாத வகைகளே கிடையாது. ஒரு சில மெஸ்கள் மட்டுமே விதிவிலக்கு. இப்படி அன்றாடம் நாம் புழங்கும் பல விசயங்களுக்கு ஒரு போராட்டமில்லை. என்னவென்றே தெரியாத அணு உலைக்கு எதிராக வேட்டியை மடித்துக் கொண்டு நிற்கிறோம். கூடங்குளம் அணு உலையை விரைவில் செயல்படுத்த வேண்டும் என போராட்டங்கள் தீவிரமாகும் நாள் வெகு தொலைவில்லை.

பின் குறிப்பு :- இந்தப் பதிவு கூட மின்வெட்டு நேரத்தில் யு.பி.எஸ். உதவியால் பதிவிடப்பட்டுள்ளது.

Sunday 12 February 2012

திருப்பூர் புத்தகக் கண்காட்சி - சில அனுபவங்கள்


தொடர் வேலைப் பளு காரணமாக பதிவு போட முடியவில்லை என்று வருத்தமாக இருக்கிறது. எனினும் தொடர்ந்து பதிவு போட முயற்சி செய்கிறேன்.

சென்ற ஜனவரி 25 முதல் பிப்ரவரி 5 வரை நடைபெற்ற 9வது திருப்பூர் கண்காட்சிக்கு மூன்று முறை சென்றேன். இயற்கை வரலாறு அறக்கட்டளையின் கானுயிர் புகைப்படக் கண்காட்சி அரங்கும் இடம் பெற்றிருந்தது. புகைப்படங்களும் மிகச் சிறப்பாக இருந்தன. பள்ளி மாணவர்கள் பலர் வியப்புடன் புகைப்படங்களைப் பார்த்து ரசித்தனர்.

எப்பொழுதும் புத்தகக் கண்காட்சியில் இரண்டாயிரம் ரூபாய்க்காவது புத்தகங்கள் வாங்குவேன். ஆனால் இந்த முறை மிகக் குறைவாகவே வாங்கினேன். காரணம் ஏற்கனவே வாங்கிய புத்தகங்களில் பெரும்பாலானவற்றை இன்னமும் திறந்து கூடப் பார்க்கவில்லை. அவைகளை சும்மாவேனும் அடுக்கி வைத்து என்ன பயன்?. மேலும் புத்தகக் கண்காட்சி முழுவதும் சுற்றி வந்து பார்த்தால் தொண்ணூற்றியைந்து விழுக்காடு புத்தகங்களால் ஒரு பயனும் இல்லை என்பது தெளிவாகப் புலப்படுகிறது. காகிதத்திற்குப் பிடித்த கேடு எனத் தோன்றுகிறது.

புத்தகங்களில் பெரும்பாலானவை வெளிநாட்டுத் தன்னம்பிக்கைப் புத்தகங்கள், ஜோதிடம், சமையல் குறிப்புகள், ஆன்மிகம், பணம் சம்பாதிப்பது எப்படி? போன்ற வகையறக்களாகவே உள்ளன. இருந்தாலும் கீழ்க்கண்ட சில புத்தகங்களை வாங்கினேன். ஏதாவது தேறுமா என்று பாருங்களேன்.

1) கனவுகளின் விளக்கம் - சிக்மண்ட் ஃபிராய்ட் - தமிழில் : நாகூர் ரூமி
2) காசு ஒரு பிசாசு - கலையரசன்.
3) வாழ்விழந்து வரும் கிராமிய இசைக்கருவிகள் - வெ. நீலகண்டன்
4) ஊர்சுற்றிப் புராணம் - ராகுல் சாங்கிருத்யாயன்
5) ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம் - மால்கம் க்ளேட்வெல் - தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்
6) சினிமா வியாபாரம் - சங்கர் நாராயணன்
7) கொத்து பரோட்டா - சங்கர் நாராயணன்
8) அழிக்கப் பிறந்தவன் - யுவ கிருஷ்ணா
9) ஆமென் - சிஸ்டர் ஜெஸ்மி